பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மீது சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன் லாகூரில் பத்திரிக்கையாளர் மன்றத்தின் முன்பாகவே ஹஸ்னைன் ஷா என்ற பத்திரிகையாளர் பட்டப்பகலில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் காரில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சில நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பத்திரிக்கை அமைப்புகளும் பல நாடுகளின் பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன. ‘உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான ஐந்து நாடுகளில் பாகிஸ்தானும் உள்ளது. கடந்த ஆண்டு, பணியின் போது சுமார் 63 ஊடகவியலாளர்கள் அங்கு கொல்லப்பட்டனர். 1990 முதல் 2020 வரை பாகிஸ்தானில் 2,658 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சில சந்தர்ப்பங்களில், பாகிஸ்தானில் பத்திரிகையாளர்கள் தடுப்புக்காவல் மற்றும் அரசின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். சிலரது குடும்ப உறுப்பினர்கள் கட்த்தப்பட்டு உள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்கள் என்றால் அவர்களின் நிலை இன்னும் மோசம்’ என என்று பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ தெரிவித்துள்ளது.