ஸ்ரீநகரின் ‘லால்சௌக்’ பகுதி நமது நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன் என்றுமே அது பதற்றமான பகுதியும்கூட. பாரதம் சுதந்திரம் அடைந்ததில் இருந்து லால்சௌக் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி முஸ்லிம் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி, தற்போது இது அனைவரும் எளிதில் அணுகக்கூடியதாக மாறிவிட்டது.
ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சாஹில் பஷீர் பட் மற்றும் சஜித் யூசுப் ஷா ஆகியோர் இங்கு பாரத தேசியக் கொடியை ஏற்றினர். இருவரும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று லால்சௌக்கில் தேசியக் கொடியை ஏற்றினர். உள்ளூர் மக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, லால்சௌக் பகுதியில் கொடியேற்றும் விழாவை நடத்தினர்.
ஆனால், அதன் பிறகு அங்கு தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. “முந்தைய அரசுகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதால், கடந்த 30 ஆண்டுகளில் மூவர்ணக்கொடி ஏற்றுதல் நடைபெறவில்லை. இந்நிலையில், பாரதத்தின் 73வது குடியரசு தினத்தையொட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க லால்சௌக்கில் காஷ்மீர் மக்கள் 1947க்குப் பிறகு முதல் முறையாக அரசு அனுமதியுடன் தேசியக் கொடியை ஏற்றினர்.
130 கோடி பாரத மக்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஒவ்வொரு பாரத குடிமகனுக்கும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நன்நாள். பா.ஜ.கவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவான 370 சட்டப் பிரிவு நீக்கம், லால்சௌக்கில் தேசியக்கொடி ஏற்றப்படுவது போன்றவை தற்போது நனவாகியுள்ளது.
முன்னதாக, 1992ல் ‘ஏக்தா யாத்திரை’ நடத்திய பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், அன்றைய பா.ஜ.க தலைவர் நரேந்திர மோடியும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும், அரசின் அடக்குமுறையையும் மீறி லால்சௌக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.