லோக் ஆயுக்தா அதிகாரம் குறைப்பு

கேரளாவில் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கேரளாவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதில் ஊழல் எதிர்ப்பு அமைப்பு தயாரித்துள்ள விசாரணை அறிக்கையை ஏற்க அல்லது நிராகரிக்க அதிகாரத்தில் திருத்தம் செய்யப்படும். இது, லோக் ஆயுக்தா அமைப்பின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதாக பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியை திசைதிருப்பியது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்ணூர் பல்கலைக் கழகத்தில் பணி நியமனம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் லோக் ஆயுக்தாவில் நிலுவையில் உள்ளன. இதில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தில் தனது உறவினரை சட்டவிரோதமாக நியமித்த விவகாரத்தில் கேரள லோக் ஆயுக்தா குற்றவாளி என உறுதிப்படுத்தியதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீல் பதவி விலகினார் என்பது நினைவு கூரத்தக்கது.