தஞ்சை மாவட்டம் அரியலூரை சேர்ந்த 17 வயது ஹிந்து சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற அவர் படித்த தூய இருதயர் பள்ளி நிர்வாகிகள் துன்புறுத்தியதால் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ‘பிஹைண்ட் வுட்ஸ்’ ஊடகத்தில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பெந்தகோஸ்தே மத போதகர் சாம் ஏசுதாஸ், ‘கிறிஸ்தவ பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் சேரும்போது, சேர்க்க பணம் உள்ளதா, ஸ்பான்சர்ஷிப் உள்ளதா என கேட்கப்படும். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உங்களுக்கு கல்விக்கான ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும் என கூறப்படும் இது வழக்கம்தான்’ என பேசியுள்ளார். இதன் மூலம், கிறிஸ்தவ பள்ளிகளில் மதமாற்றங்கள் நடத்தப்படுவதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இவ்வளவு தைரியமாக இதனை ஒப்புக்கொண்டார் என்றால், எதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிறுபான்மையினரை தாங்கிப்பிடிக்கும் தி.மு.க அரசு, மிஷனரிகளை எப்படியும் காக்கும் என்ற நம்பிக்கைதான் அடிப்படை காரணம் என்பது சொல்லாமலே விளங்கும். ஏனெனில், தமிழக முதல்வர் ஸ்டாலின், சர்ச் ஆஃப் தென்னிந்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “இந்த அரசாங்கம் உங்களால் (கிறிஸ்தவர்கள்) உருவாக்கப்பட்டது” என்று கூறியதும் கன்யாகுமரியில், ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரி, “தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை” என உண்மையை எடுத்துரைத்ததும் நினைவில் இருக்கலாம்.