உடன் பிறப்புக்கு கலைஞரின் மானசீகக் கற்பனை மடல்:-

‘உடன்பிறப்பே, அ.அ.டி என்னும், தொழில்நுட்ப வளாகத்தில் ஆரிய மொழிப் பாடல் ஒலித்த செதி கேட்டு எனது இதயம் கனத்தது: கண்கள் பனித்தன!

சற்றொப்ப இருபது ஆண்டுகளுக்குள் உனது நினைவுகளைப் பின்னோக்கிச் சுழலவிடு உடன்பிறப்பே! அப்போது நாம் அடல் பிகாரி வாஜ்பாயி, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியாகப் பங்கேற்று இருந்தோம்! ’கல்வி அமைச்சர்கள்’ மாநாடு ஒன்று நடைபெற்றது. நமது கல்வி அமைச்சர் இனமானப் பேராசிரியரும் பங்கேற்றார். அந்த மாநாட்டில் ’சரஸ்வதி வந்தனா’ எனும் ஆரியகீதம் பாடப்பட்டது. நமது இனமானப் பேராசிரியர் என்ன செதார் தெரியுமா? அந்த அரங்கத்தை விட்டே வெளிநடப்புச் செதுவிட்டார்!

உடன்பிறப்பே, உன் உதடுகள் துடிக்க, நெஞ்சம் பதைக்க நீ எதைக் கேட்க வருகிறா என்பது புரிகிறது! ‘ஏன் ஆரியகீதம் பாடிய போது அரங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்? ஆட்சியை விட்டே வெளியேறி இருக்க வேண்டியதுதானே?‘- என்கிறா. தம்பீ, அறையை விட்டு வெளியேறுவதற்கும், ஆட்சியை விட்டு வெளியேறுவதற்கும் உள்ள வேறுபாடுகள், பலாபலன்கள் நீ அறியாதவன் அல்ல!

எனவேதான் முழுமையாக அந்து ஆண்டுக் காலம் ஆரிய, பார்ப்பனீய, கீகுகு, வந்தேறி இந்துத்வா கும்பலை சகித்துக்கொண்டு, பதவியை மட்டும் விட்டுவிடாமல் அதைச் சுமக்கும் தியாகத்தை அந்து ஆண்டுகள் செவ்வனே செதோம். அப்படிப்பட்ட மானமிக்க கொள்கை மரபுக்கு சோந்தக்காரர்கள் நாம்!

மீண்டும் சற்றொப்ப நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார் உடன்பிறப்பே! சர்க்காரியா கமிஷன் எனும் சாட்டை முனை, சவுக்கடியாக நம் சதையைப் பித்தது! ’காஷ்மீரத்துப் பாப்பாத்தி’ என்று யாருக்குக் கறுப்புக்கொடி காட்டினோமோ அந்த இந்திரா அம்மையாரையே ’நேருவின் திருமகள்’ ஆக்கி அடிபணிந்து சர்க்காரியாவின் சாட்டையடியில் இருந்து தப்பிய மதியூகமிக்க மான மறவர்கள் அல்லவா நாம்!

கேட்ட இலாகாக்களை ஒதுக்கவில்லை என்றவுடன் கோபம் கொண்டு வீரம் காட்டி விமானம் ஏறி சென்னை வந்தவர்கள் நாம் –  அருகே வா, காதைக் கொடு உடன் பிறப்பே ஒரு ரகசியம் சோல்கிறேன்: ’கேட்ட இலாகா கிடைக்காவிட்டால் உங்கள்  உறவே வேண்டாம்’- என்று சோக்கத் தங்கம் சோனியாவிடம் கூறிவிட்டு, சென்னைக்கு விமானம் ஏறியபோதே டில்லிக்கு ’ரிடர்ன் டிக்கெட்’ போட்டுவிட்டுதான் ஏறினோம் என்பதை நீ அறியாவிட்டாலும் நம் எதிரிகள் ஊகித்திருப்பார்கள்!

எனவே இப்போது வீரம் காட்ட வேண்டிய நேரம்! அ.அ.டி என்பது ஆரியக் கூடாரமாக மாறி, வடமொழியில் வந்தனப் பாடல் பாடுவதை அனுமதியோம்- பொங்கி எழு, புறப்படு போர்ப்பரணி முழக்கி!

இது வீரம் காட்ட வேண்டிய நேரம் – பிறகு வினயமும், பணிவும் காட்ட வேண்டிய நேரமும் வரும்! அது 2ஜி வழக்கு அப்பீலாக இருக்கலாம் – தயாநிதி மாறன் கேபிள் பதித்த வழக்காக இருக்கலாம்! அப்போது நாம் வினயத்தையும், பணிவையும் வெளிப்படுத்துவோம் தம்பீ! அதுவரை வீரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிரு உடன்பிறப்பே!