மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற கோட்டைகளில் முஸ்லிம்கள் சத்தமில்லாமல் சட்டவிரோத கட்டுமானங்களை கட்டிவருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜாவின் ராய்காட் கோட்டைக்குள் சட்டவிரோதமாக ஒரு மசூதி கட்டப்பட்டுள்ளது. இதேபோல விஷால்காட் கோட்டை, குலாபா கோட்டை, சந்தங்காட் கோட்டை உள்ளிட்ட கோட்டைகளிலும் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ள விஷயமும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் அபிமானிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்செயல், முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி வரலாற்றை திரிக்கும் முயற்சியாகவும் கருதப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிராவில் அவர்களின் துணை இல்லாமல் இது நடைபெற சாத்தியமில்லை. தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்களில் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என பொதுமக்களும் ஹிந்து அமைப்பினரும், பா.ஜ.கவினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பா.ஜ.க தலைவர்கள் வினய் சஹஸ்ரபுத்தே, சுனில் தியோதர் தலைமையிலான குழு இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளது.