லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் உள்ள கிராமம் ஃபே. மலைப்பாங்கான பகுதி, கடும் பனி நிலவும் சூழல்கள் போன்ற சவால்கள் நிறைந்த இப்பகுதியில் குழாய் மூலம் மக்களுக்கு குடிநீர் கொண்டுசென்று வழங்குவது மிகவும் சிரமம். இமையமலையை ஒட்டியப் பகுதி என்றாலும் அங்கு தண்ணீர் பஞ்சம் நிலவும். ஆனால், இந்தத் தடைகளை தகர்த்தெறிந்து அப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் என்ற கனவை சாதித்துக் காட்டியுள்ளது மத்திய அரசின் ஜம் ஜீவன் மிஷன். இதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சோலார் மின்சாரம் போன்ற பல வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதற்கு அந்த கிராமத்து மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.