கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசின் ‘பால் ஸ்வராஜ்’ என்ற இணையதளத்தில் மாநில, யூனியம் பிரதேச அரசுகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்தத் தகவல்கள் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 1, 2020 முதல் ஜனவரி 11 வரை, வரையிலான தரவுகளின்படி, கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் நிலை (10,094), பெற்றோரை இழந்தவர்கள் (1,36,910) , கைவிடப்பட்டவர்கள் (488) என மொத்தம் 1,47,492 ஆக உள்ளது. இதில், 76,508 ஆண்களும், 70,980 சிறுமிகளும், நான்கு திருநங்கைகளும் உள்ளனர். ஒடிசாவில் அதிகபட்சமாக 24,405 குழந்தைகளும் மகாராஷ்டிரா 19,623, குஜராத் 14,770, தமிழகம் 11,014, உத்தரப் பிரதேசம் 9,247 என்ற எண்ணிக்கையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.சி.பி.சி.ஆர் இதுசம்பந்தமாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன்களுடன் மெய்நிகர் சந்திப்புகளை நடத்தி நிலவரத்தை அறிந்து வருகிறது. என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.