வைரசை அழிக்கும் தொழில்நுட்பம்

கொரோனா வைரஸ் பரவலைக் குறைப்பதற்கான தொற்று அழிப்பு தொழில்நுட்பத்தின் சி.எஸ்.ஐ.ஆர் வழிகாட்டுதல்களை வெளியிட்டு பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க ரயில் பெட்டிகள், ஏசி பேருந்துகள், அறைகளில், மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) உருவாக்கிய  புறஊதா – சி (யுவி – சி) கதிரியக்கத் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் காற்றில் பரவும் இதர கிருமிகளை யுவி – சி தொழில்நுட்பம் செயலிழக்கச் செய்கிறது. இதனால், மிகப் பெரிய அரங்குகள், வகுப்பறைகள், வணிக வளாகங்களிலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொற்றுக்கு எதிரான பாதுகாப்புச் சூழலை உருவாக்க முடியும். ஏற்கனவே ரயில் நிலையங்கள், ஏசி பஸ்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் உபயோகத்திற்காக இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், முகக்கவசம், சமூக இடைவெளி, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என தெரிவித்தார்.