சேவாபாரதி சேவை

கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 23ம் தேதியன்று இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்காக மேலும் நான்கு மருத்துவ அவசர ஊர்திகளை (ஆம்புலன்ஸ்) சேவாபாரதி அர்ப்பணித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சாதாரண நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இவை உதவும். மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் சேவாபாரதி ஆம்புலன்ஸ் சேவை மேற்கொள்கிறது. இந்தப் பிரிவில்  ஏற்கனவே 106 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த 4 ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சேவா இண்டர்நேஷனல் உதவியுடன் “சிதாக்னி” என்ற பெயரில் மொபைல் தகன பிரிவுகளையும் சேவாபாரதி அமைத்துள்ளது.