மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை விரிவுபடுத்த, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்து, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் பல்வேறு திருத்தங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2022 அக்டோபர் 1 க்கு பிறகு தயாரிக்கப்படும் எம் 1 வகை வாகனங்களில் பக்கவாட்டில் இரண்டு காற்று பைகள் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.