மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள குராடி கிராமத்தில், நான்கு கிறிஸ்தவர்கள் கிராம மக்களை அணுகி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வற்புறுத்தியும் மிரட்டியும் வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை, இலவச மருத்துவ வசதிகள், தேவைப்படும் போதெல்லாம் பணம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என ஆசை காட்டினர். ஏசுவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் மூளைச்சலவை செய்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அவர்களைப் பிடித்து இச்சாவார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டத்தின்படி வழக்குப் அதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டம், திருமணம் உள்ளிட்ட மோசடியான வழிகளில் செய்யப்படும் மத மாற்றங்களைத் தண்டிக்கின்றது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறார்களை மதம் மாற்றுவது தொடர்பான வழக்குகளில், இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50,000 அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.