நைஜீரியாவில் நடைபெற்ற 30 மாத உள்நாட்டுப் போரைப் பற்றி கடந்த ஜூன் 4, 2021 அன்று ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார் அந்நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி. அவரின் டுவிட்டர் பதிவை எவ்வித காரணமும் கூறாமல் டுவிட்டர் நீக்கியது. இதுகுறித்து அந்நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால், டுவிட்டரை காலவரையின்றி முடக்கியது அந்நாட்டு அரசு. இந்நிலையில், அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய டுவிட்டர் நிர்வாகம், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதாக ஒப்புக்கொண்டது. இதனையடுத்து நைஜீரிய அரசு, டுவிட்டர் மீதான தடையை நீக்கியுள்ளது. இதனையடுத்து டுவிட்டரின் செயல்பாட்டை கண்காணிக்க 7 நபர் உயர்மட்டக்குழு, 20 நபர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினை அதிபர் அமைத்துள்ளார்.