பாரதத்தில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உபகரணத் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தின் கீழ் கடந்த 23 செப்டம்பர் 2021 வரை மொத்தம் 115 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளது. வாகனத் தொழில்நுட்பப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வாகன உற்பத்தித் துறையில் பாரதத்தை முன்னேற்றவும், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகளை மத்திய அரசு வழங்குலிறது. இதற்காக வழங்குகிறது. ரூ. 25,938 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 1 ஏப்ரல் 2022 முதல், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பாரதத்தில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப (ஏ.ஏ.டி) தயாரிப்புகளின் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனைக்கான திட்டத்தின் கீழ், இந்த ஊக்கத்தொகைகள் பொருந்தும் என்று கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.