வனவாசி கல்யாண் ஆசிரமப் பணிகள்

மலைவாழ் வனவாசி பழங்குடியின மக்கள் வாழ்வில் முன்னேற உதவும் வனவாசி கல்யாண் ஆசிரமம் தொண்டு அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நகர்புற செயல்பாடுகள் அமைப்பாளருமான பகவான் சஷாய், தனது தமிழக சுற்றுப் பயணத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்தார். அப்போது நமது விஜயபாரதம் அலுவலகம் வந்திருந்து வனவாசி கல்யாண் ஆசிரமம், அதன் பணிகள், அரசு திட்டங்கள், பழங்குடியின மக்கள் வாழ்வில் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி ஆசிரியர் குழு உறுப்பினர்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.