கேரளாவின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா, இக்கட்டான கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி, ரூ. 1,600 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பி.பி.இ கிட் வாங்க ரூ. 1,500, அகச்சிவப்பு வாங்க ரூ. 5,500, டெண்டர் இல்லாத கொள்முதல், தரமற்ற பொருட்கள், இல்லாத நிறுவனத்துக்கு பணம், ஒப்பந்தப்படி வழங்கப்படாத பொருட்கள் என அனைத்து விதங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் இதுகுறித்த 3,000 ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஷைலஜா, முதல்வர் பினராயி விஜயனின் வற்புறுத்தலின் பேரில் இது நடந்தது, அனைத்தும் முதலமைச்சரின் அனுமதியுடனேயே நடந்தது என கூறியுள்ளார்.