பந்தலூர் பண்ணிக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் 23 ஆதிவாசி குடும்பங்கள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த 26 நபர்களை கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்துள்ளனர். இத்தகவலை அறிந்த இந்துமுன்னணி பொறுப்பாளர்கள், அந்த பகுதிக்கு சென்று அவர்களுக்கு மதமாற்றம் குறித்து விழிப்புணர்வை வழங்கினர். இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அன்னை சத்யா நகர் பகுதியில் இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களிடம் கிறிஸ்தவர்கள் மதமாற்றம் பிரச்சாரம் செய்துவந்தனர். இந்த சதிச்செயல், இந்து முன்னணியினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.