கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் உலகை அச்சுறுத்த ஆரம்பித்து உள்ள சூழலில், இஸ்ரேலில் ‘ஃப்ளோரோனா’ நோயின் முதல் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது. இது கொரோனாவின் புதிய மாறுபாடு அல்ல. இது கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவின் இரட்டை தொற்று வகை என கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்கள் மனித உடலில் நுழைவதால், நோய் எதிர்ப்புச் சக்தி பெரிய அளவில் குறையும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் தனது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து உள்ளது.