வாசியுங்கள் இந்தியா இயக்கம்

‘வாசியுங்கள் இந்தியா” என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். உள்ளூர், தாய்மொழி, பிராந்திய, பழங்குடி மொழிகளில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ற புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வது, அதன் மூலம் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பது என்பதை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் இந்த 100 நாட்கள் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் அங்கன்வாடியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை மையமாகக் கொண்டது. ஜனவரி 1, 2022 முதல் 10 ஏப்ரல், 2022 வரை நடைபெறும். குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாயம், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அளவில் அனைத்து பங்குதாரர்களும் இந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்பர். சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 21ம் தேதியும் இந்த பிரச்சாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.