இந்தியன் எக்ஸ்பிரசின் அயோத்தி சதி

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒருகாலத்தில் அதன் நேர்மைக்கு புகழ் பெற்றது. ஆனால், இன்று அதுவும் மற்ற ஊடகங்களைப் போலவே தனது நேர்மையை இழந்து வருகிறது. கடந்த 24 டிசம்பர் 2021 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தி வெளியிட்டது. அதில், அயோத்தி நில ஒப்பந்த சர்ச்சை என்ற வகையில், ‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு, சில அதிகாரிகள், அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் அயோத்தியில் ராமர் கோயில் அமையும் இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் நிலங்கள் வாங்கியுள்ளனர்’ என கூறப்பட்டது. ஆனால், இது குறித்த ‘ஓப் இந்தியா’ செய்தி நிறுவன விசாரணையில், அதில் குறிப்பிடப்பட்ட நிலங்கள் கோயிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளதாக தெரிய வந்தது. மேலும், இந்தியன் எக்ஸ்பிரசின் செய்தியை அறிந்த உள்ளூர் மக்கள், ‘இந்த செய்தி முற்றிலும் தவறானது. புண்ணிய நகரமான அயோத்தியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இதுபோன்றச் செய்திகள் வெளியிடப்படுறது. சில நாட்களுக்கு முன் 5 பத்திரிகையாளர்கள் இங்கு வந்து ஆட்சியரை தகாத வார்த்தைகளால் பேசினர். நாங்கள் சர்ச்சைக்குரியவர்களாக ஆக்கப்படுகிறோம். இது, இந்தப் பகுதியின் வளர்ச்சியைத் தடுக்கும் சதி. நில ஒப்பந்தங்கள் அனைத்து சட்டப்படி மேற்கொள்ள்ப்பட்டது. நாங்கள் பெற வேண்டிய முழுத் தொகையையும் பெற்றுவிட்டோம். யாரும் எங்களை வற்புறுத்தவில்லை’ என்று கூறியுள்ளனர். அயோத்தியில் உள்ள துறவிகளும் இந்தியன் எக்ஸ்பிரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.