அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் ஜிம்மி கானர்ஸ், அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘கொரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடுப்பூசி திட்டத்தில் ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், மாடெர்னா போன்ற நிறுவன்ங்களின் தடுப்பூசிகளை பயன்படுத்துகிறீர்கள். ஆனால், அனைவருக்கும் இது விருப்பமான தேர்வாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருசிலருக்கு பாரதத்தின் தயாரிப்பான கோவாக்சின் விருப்பத் தேர்வாக இருக்கலாம். அதனைஅரசு ஏன் அனுமதிக்கக்கூடாது? நான் மருத்துவர் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.