முன்னாள் உத்தர பிரதேச ஷியா வஃபு வாரியத் தலைவரான வாசிம் ரிஸ்வி, எழுதிய ‘முகமது’ புத்தகத்தில் முஸ்லிம் மதம், குரான் மற்றும் முகமது நபிக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிய ஒரு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவர் எழுதிய புத்தகத்தின் விற்ற மற்றும் விற்கப்படாத அனைத்து நகல்களையும் திரும்பப் பெற்று அழிக்க வேண்டும். ரிஸ்வி எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க 2 கோடியே 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என கோரி கமர் ஹஸ்னைன் என்பவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலாவின் தலைமையிலான அமர்வு, இத்தகைய வழக்குகள் அட்வகேட் ஜெனரலால் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது, இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இவ்வழக்கை நீதிமன்றத்தில் கொண்டு வர மனுதாரருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. வாசிம் ரிஸ்வி சமீபத்தில், முஸ்லிம் மதத்தை விடுத்து தாய்மதமான ஹிந்து மதம் திரும்பி தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சுவாமி என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.