மதமாற்றம் தடுப்பு

திருவண்ணாமலை மாத்தூர் காமராஜ் நகரில் ஹிந்துக் குழந்தைகள் மற்றும் பெண்களை கிறிஸ்துமஸ் விழாவை காரணம் காட்டி, மதமாற்றம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை தடுக்கச் சென்ற இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணனுக்கு கிறிஸ்தவ மதமாற்றுக் கும்பலை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் பரிசு தருவதாகக் கூறி மதம்மாற்றும் நோக்கத்தோடு ஹிந்து குழந்தைகளை மருத்துவமனை நிர்வாகம் அழைத்தது. தகவலறிந்த இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினர்.