ஆரோக்கியமான மாநிலங்கள் முன்னேறும் பாரதம்

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுகாதாரத்தில் ஒட்டு மொத்த செயல்பாடுகள் குறித்த வருடாந்திர சுகாதாரக் குறியீடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், உலக வங்கி ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு நிதி ஆயோக் மூலம் வெளியிடப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடையே, சுகாதார பயன்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின் செயல்பாடு ஆகியவற்றில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘ஆரோக்கியமான மாநிலங்கள் முன்னேறும் பாரதம்’ என்ற மாநிலங்களின் செயல்பாடு குறித்த தரவரிசை குறியீடு வெளியிடப்படுகிறது. இத்தகைய அறிக்கையின் 2019 – 20 நிதியாண்டுக்கான நான்காவது தொகுப்பை நிதி ஆயோக் இன்று வெளியிட உள்ளது.