ஒரு 24 வயது பெண்ணுக்கு தனது மதத்தை தேர்வு செய்யும் உரிமை இல்லையா? அவளுக்கு அந்த அளவு மன முதிர்ச்சி இருக்காதா? இப்படி வரிந்து கட்டிக்கொண்டு பல இடதுசாரி பத்திரிகையாளர்கள் ஹதியா என பெயர் மாற்றிக்கொண்டு, மதத்தையும் மாற்றிக் கொண்ட கேரளாவின் அகிலா அசோகன் என்கிற ஹோமியோபதி மாணவிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த விஷயத்தை விவாதிக்கும் முன்பு இது என்ன விஷயம் என்று மிகச் சுருக்கமாக பார்த்து விடலாம்.
கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கே.எம். அசோகனின் ஒரே மகள் அகிலா அசோகன் 12ம் வகுப்பில் பெயிலாகி, டாக்டருக்குப் படிக்க சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் நடத்தும் ஹோமியோபதி கல்லூரியில் சேர்த்தார்கள். அங்கு இரண்டு முஸ்லிம் மாணவிகள் இவருக்கு விரித்த மதமாற்ற வலையில் அகிலா வீழ்ந்தாள்.
அகிலா புர்க்கா அணிந்து வகுப்புக்கு வருவதை மற்ற மாணவிகள் அகிலாவின் வீட்டுக்கு போனில் சொல்லியவுடன் தந்தை அசோகன் சேலம் விரைகிறார். அதற்குள் அகிலா மலப்புரத்துக்கு கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு கல்யாணமும் செய்து வைக்கப்படுகிறார்.
இதற்கு முன்பு அகிலாவை இரண்டு முறை மலப்புரத்துக்கு அவரது சக தோழிகளாக நடித்து வந்த முஸ்லிம் மதமாற்ற ஏஜெண்டுகள் கூட்டிச் சென்று வருகின்றனர். அந்த இடம்தான் மதமாற்றும் தொழிற்சாலை சத்தியசரின் எனப்படும் மதமாற்ற குரு ஜைனபா வசிக்கும் இடம்.
இதில் மிகவும் அபாயகரமான விஷயம், இது மதமாற்றத்தோடு இணைந்த பயங்கரவாத கும்பல் என்பது. மணமகன் ஹபின் ஜஹானின் பேஸ்புக் லிங்கில் பார்க்கும்போது அவன் சிரியாவின் ஐஎஸ் ஐஎஸ்ஸின் ஏஜெண்ட் என்பது தெரியவந்தது. இதுமாதிரி அப்பாவி ஹிந்துப் பெண்களை மனோவசியம் என்னும் ஹிப்நாட்டிக் கவுன்சிலிங் கொடுத்து மதமாற்றி சிரிய நாட்டின் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு செக்ஸ் அடிமையாக விற்றுவிடுவது இவர்களது தொழில். இதில் அகிலா அசோகன் அப்பாவியாக சிக்கிக் கொண்டார். இதைத்தான் கூட இருந்து கழுத்தறுத்துக் கொல்வது அல்லது ‘லவ் ஜிகாத்’ என்ன்று சொல்வார்கள்.
அகிலா அசோகன் – ஹபின் ஜஹான் போட்டோ பத்திரிகைகளில் வந்துள்ளது. இந்தப் படமே பலகதை சொல்லும்.
காலேஜில் காணாமல் போன பெண்ணைத் தேடி அப்பா அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு போட்டு கண்டுபிடித்து, லவ் ஜிகாத் என நிரூபித்து அதை நீதிமன்றமும் ஏற்றது; திருமணம் செல்லாது என அறிவித்து மகளை தகப்பனிடம் சேர்த்தது.
இதற்கு பிறகு ஐஎஸ் ஐஎஸ் மாப்பிள்ளையும் லவ் ஜிகாத் குழுவும் காங்கிரஸ் வக்கீல் முன்னாள் மந்திரி, ஹிந்து விரோதி கபில் சிபிலுடன் சேர்ந்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து திருமணத்தை உறுதிப்படுத்தி அகிலாவை சேர்த்து வைக்கச் சொன்னார்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அகிலாவின் படிப்பை தொடர அனுமதி அளித்து பெற்றோர் மட்டும் பார்க்க அனுமதி அளித்தனர். திருமணம் செல்லாது என அறிவித்த தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இப்போது அந்தப் பெண் அங்கு படிப்பை தொடர்கிறாள். முன்னாள் கணவனுடன் பேசுகிறாள். பெற்றோரிடமும் பேசுகிறாள். இன்னும் 10 மாதம் சேலம் கல்லூரியில் அவள் படிப்பை தொடர்வாள். நீதிமன்றம் ஜனவரி 3ம் வாரம் மீண்டும் கூடும். அப்போது என்ன நடக்கும் என நமக்குத் தெரியாது. இதுதான் கதைச் சுருக்கம். இது ஒருபுறம் இருக்க, நீதிபதிகள் நவம்பர் 27ம் தேதி இந்த மதமாற்றத்தை தேசிய புலனாய்வு ஏஜென்ஸி (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
NIAயும் தனது 100 பக்க அறிக்கையில் லவ் ஜிகாதில் எப்படி மூளை சலவை செய்யப்படுகிறது என கூறியுள்ளது.
இந்தியா டுடே டிவியும் கடந்த மாதம் கேரள லவ் ஜிகாத்துக்கு ஆள் பிடிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஊதுகுழல் சத்திய சாரினி என்கிற அமைப்பு, அதன் பெண்கள் அணித் தலைவி ஜைனாபாவின் வண்டவாளங்கள் இவற்றை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.
இதை எல்லாம் பார்த்த பிறகும் கூட ‘அகிலா அசோகனின் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள், யாரையும் திருமணம் செய்துகொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கிறது. ஒரு பெண்ணின் திருமணத்தை முடிவுசெய்ய அவர்களது பெற்றோருக்கு உரிமை கிடையாது’ இவை தான் இடதுசாரி தேசவிரோத, ஹிந்து விரோத பத்திரிகைகள் மீண்டும் சொல்வது.
சரி, அவர்கள் வாதத்திற்கு நாமும் பதில் சொல்வோம். ஹிந்துவாக இருக்கும்போது சுதந்திரமாக தன் வாழ்க்கைத் துணையை தேடும் ஒரு பெண், பெண்களுக்கு சுதந்திரமே இல்லாத இஸ்லாத்துக்கு போவதற்கு அவள் சுயபுத்தியில் எப்படி தீர்மானிப்பாள்? அவன் அங்குபோய் மூன்று முறை தலாக்கில், நான்காவது மனைவியாக வாழவேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
இப்படி அகிலா அசோகன் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் பத்திரிகை, டிவி ரிப்போர்ட்டர்கள் (எல்லாரும் ஹிந்துக்களே) தங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் இஸ்லாத்துக்கு மாறுவதை ஏற்பார்களா?
சரி! இதெல்லாம் கேட்டால் பர்சனலாக பேசாதீர்கள் என்பார்கள். சரி! புது மாப்பிள்ளை ஹபின் ஜஹாம், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளோடு பேஸ்புக்கில் தொடர்பில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறதே! இந்தப் பெண்ணை திருமணம் செய்து செக்ஸ் அடிமையாக விற்கும் ஏஜெண்ட் அவன் என்பதும் உண்மையானால் உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தால் ஏற்பீர்களா?
மிகவும் திட்டமிட்டு ஹிப்நாட்டிக் கவுன்சிலிங் என்னும் மூளைச்சலவை செய்து ஹிந்துப் பெண்களை மதமாற்றும் இந்த அபாயம் ஏற்கக்கூடியது என நீங்கள் நம்புகிறீர்களா?
25 வயது பெண்ணுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது. உண்மை. அது எங்கே, எப்படி?
சாதாரண காலத்தில் சகஜமான இடத்தில் மட்டுமே! பத்துபேர் சுற்றி நின்று மனோவசிய கவுன்சிலிங் செய்து மாற்றும்போது அல்ல!
ஹிந்து மதத்தை விட பெண்களுக்கு சுதந்திரமான மதம் வேறு எங்குள்ளது? அதுவும் பெண்களை அடிமைகளாக நடத்தும் இஸ்லாம்தான் இவர்களை ஈர்க்குமா? எப்படி இது சாத்தியம்? ஏமாற்றி மனம் மாற்றி மதமாற்றினால் மட்டுமே சாத்தியம்!
அப்படியாயின் அகிலா ஏன் நீதிபதியிடம் தன் கணவனை பார்க்க வேண்டுமென விருப்பம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீங்கள் கேட்கலாம்.
அங்குதான் நம் பெற்றோர்களை நாம் குற்றம் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பெற்றோர் என்ற காரணத்தினால் மட்டும் நாம் குழந்தைகளின் மீது உரிமை கோரிவிட முடியாது!
வளர்ப்பு என்பது சொல்லித் தருவது மட்டுமல்ல, போதிப்பது மட்டுமல்ல, வாழ்ந்து காட்டுவது!
குழந்தைகளின் 12 வயது வரை நம் குடும்பத்தில் அவர்களின் பெற்றோர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு, செயல், சிந்தனைகளை குழந்தைகளின் மனதில் டேப்பாக பதியும். அதுவே 21 வயதுக்குப் பிறகு ரிலீஸாகி செயல்படும்.
அகிலாவின் தந்தை ஒரு கம்யூனிஸ்ட். மதநம்பிக்கைகளுக்கு எதிரானவர். தாய் மிகவும் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்த பக்தி மிகுந்த பெண்மணி.
வீட்டில் தாய் தந்தைக்கிடையே ஒற்றுமை இல்லை. தந்தை மத சடங்குகளுக்கு எதிரானவர் என்பதால் தாயோடு ஒத்துப் போகாதவர். அகிலாவிற்கு இதனால் வாழ்க்கையில் பிடிப்பற்று போனது. அகிலா தந்தைக்கு எதிராக மாறினார். இதனால் மனக்குழப்பம், நிம்மதி இன்மையால் 12வது வகுப்பில் பெயில் ஆனாள். தன் தந்தையின் செயல்பாட்டுக்கு எதிராக நடக்கவோ தன் தந்தையை பழிதீர்க்க வேண்டுமென்று நினைத்திருந்த வேளையில், இஸ்லாமிய மதமாற்ற ஏஜெண்டுகளின் மூளைச் சலவையில் சிக்கியிருக்கிறாள்.
ஜாதி விட்டு ஜாதியும் வேற்று மதங்களிலும் திருமணம் செய்யும் பெண்களின் மனங்களில், வீடுகளில் பெற்றோர்களிடம் நிலவும் சச்சரவு, ஒற்றுமையின்மை, மனச்சிதைவை உண்டு பண்ணுகிறது. இதற்கு அகிலா இப்போது உதாரணம்.
மதம் மாறி, திருமணம் செய்து, திருமணம் செல்லாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மே மாதம் வீடு திரும்பிய அகிலாவை 6 மாதம் வீட்டில் வைத்திருந்த பெற்றோரால் அகிலாவின் மனதை வெற்றி கொள்ள முடியவில்லை. ஏன் என்பது இப்பிரச்சினைக்கான பதிலாக அமையும்.
நம் பெண்களை கொத்தி செல்ல நினைக்கும் கழுகுகள் பார்வையில் நாம் அவர்களை விடலாமா? அவர்களை இணக்கமாக வைத்துக்கொள்ள பெற்றோர்கள் இணக்கமாக இருக்க வேண்டாமா?
இப்போது லவ் ஜிகாத், ஹிந்து கம்யூனிஸ்ட் குடும்பங்களைத்தான் குறி வைக்கின்றனர். ஏனெனில், அக்குடும்பப் பெண்களின் நாத்திக போக்கு குழந்தைகளுக்கு மனச்சிதைவை ஏற்படுத்துகிறது என்பதற்கு அகிலாவே ஒரு உதாரணம். என்ன காரணம் சொன்னாலும் ஓநாய்கள் ஒழிக்கப்படும் வரை புள்ளிமான்களுக்கு பாதுகாப்பில்லைதான்.