தேனி மாவட்டத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டொம்புச்சேரி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள முஸ்லிம்கள் சிலர், அப்பகுதி ஹிந்துக்களை மூளைசலவை செய்து மதம் மாற்றியுள்ளனர். அவர்களுக்காக புதிய மசூதி ஒன்றை எவ்வித முறையான அனுமதியும் இன்றி தகரக் கொட்டகையில் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதுகுறித்துக் கேள்விப்பட்ட இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து டொம்புச்சேரி கிராமத்தில் இருந்த மசூதிக்கு தாசில்தார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.