முழுமையான கல்வி திட்டம்

மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, மக்களவையில் அளித்த பதிலில், ‘அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக, தேசிய கல்வி கொள்கையின் கீழ், ‘சமக்ர சிக்ஷா’ என்ற முழுமையான கல்வி திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரை தொடரும். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. இதுகுறித்த விளக்கத்தை https://samagra.education.gov.in/docs/samagra_shiksha.pdf  என்ற இணையதளத்தில் காணலாம்’ என தெரிவித்தார்.