திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கன்னி கிராமத்தில் வனத்துறைக்கு உட்பட்ட மலையில், 1961ல், அப்பகுதி மக்கள் மூலம் சிலுவை நடச் செய்த சர்ச் நிர்வாகம், மலையில் 2 ஏக்கரை ஆக்கிரமித்து, 1982ல் சர்ச் ஒன்றை கட்டியது. 2014ல் மலையை வெட்டி சாலை, 5 ஏக்கரில் பார்கிங் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. மூன்று மாதங்கள் முன் அங்கு தார் சாலை அமைக்கும் பணிகளை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்தார். அட்சியரின் ஆய்வின்போது மலை ஆக்கிரமிப்பு விஷயம் வெளியானது. இதனையடுத்து இதனை விசாரிக்கவும், கட்டுமான பணிகளை அகற்றவும் உத்தரவிட்டார். வருவாய்துறை விசாரணயில், சர்ச் கட்டப்பட்டு, பிறகு அதை சுற்றியுள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. அங்குள்ள யாருக்கும் பட்டா வழங்கவில்லை என்பதும் தெரிந்தது. சர்ச் தவிர்த்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தை ஒட்டியுள்ள சவேரியார்பாளையத்தில் உள்ள மலை மீதும் சிலுவை நடப்பட்டுள்ளது. போளூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மலையை ஆக்கிரமித்து, கிறிஸ்தவ பொம்மைகளை வைத்து ஜெபவீடு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த கிராமத்தில் அனுமதி பெறாத ஜெபகூட்டங்கள் பல பெருகி வருகின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி பொதுச்செயலாளர் அருண்குமார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.