ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ எனது தொடங்கும் பாடலில், அன்றாட வாழ்வில் நாம் செய்யவேண்டியது என்ன? இறை சிந்தனை வளர்த்து அவனது ஈடு இணையற்ற கழலடிகளைப் பற்ற “நான் முந்தி, நீ முந்தி” எனப் போட்டி போட வேண்டும். அதுவே பக்தி, அதுவே வாழ்வின் முறை. தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கிறான் சிவபெருமான். அவனைப் பாடி பாடி உள்ளம் உருகும் உன்னத நிலைதனை உறுதியுடன் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”
அதை விட்டுவிட்டு, “அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போல இவனைப் போல் தியானம் செய்தால் இறையருள் சாத்தியமா? இன்னொருவன் லட்ச லட்சமாய் பணச்செலவு செய்வதால் அருள் கிடைத்துவிடுமா? என்று திக்குத் தெரியாத யோசனைகளை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.
ஆர் கிருஷ்ணமூர்த்தி