பொது இடங்களில் தொழுகை சர்ச்சை

ஹரியானாவின் குருகிராமில் திறந்தவெளிகள், பொது இடங்களில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தோறும் குழுவாக தொழுகை செய்வது அங்கு பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து விளைவித்து வருகிறது. இதனால், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சமூக ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுகின்றன. பல இடங்களில் இதனால் பிரச்சனைகள் ஏற்பட துவங்கிவிட்டன. இதனையடுத்து ஹரியானா அரசு, பொது இடங்களில் தொழுகைக்கு தடை விதித்தது. இருந்தபோதும் சட்டத்தை மீறி முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்றனர். மசூதிகளில் தொழுகை நடத்த இடம் இல்லை என இதற்கு காரணமும் கூறும் இவர்கள், தங்கள் பொதுஇடத்தில் தொழுகைக்கு காவல்துறை பாதுகாப்பளிக்கவும் வலியுறுத்துகின்றனர். கடந்த வெள்ளியன்று தொழுகையின்போது சிறு பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, குருகிராமின் முஸ்லீம் கவுன்சில் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அதீப், பொது இடங்களில் தொழுகைக்கு பொதுமக்கள் இடையூறு விளைவிப்பதைத் தடுக்கத் தவறியதால், ஹரியானாவின் தலைமைச் செயலாளர் காவல்துறை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். (இப்படி நூற்றுக்கணக்கில் குழுவாகக் கூடி, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதத்தில் தொழுகை நடத்த வேண்டும் குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).