இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்தவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்ல உதவித்தொகை வழங்கப்படுகிறது. காசி, மதுரா, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள புனித தலங்களுக்கு சென்றால்தான், பிறவிப் பயனை அடைவோம் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை. எனவே, ஹிந்துக்கள் காசி, மதுரா உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்ல, தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.