லடாக்கில், பௌத்த குழுக்கள் ஜிஹாத்தை சீர்படுத்துதல் போன்ற கொள்ளையடிக்கும் இஸ்லாமிய மதமாற்ற தந்திரோபாயங்களுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜே&கே அவர்களின் ‘முஸ்லிம்களின் நேரடி மதமாற்ற நடவடிக்கைகள் மக்களால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. இதனையடுத்து, முஸ்லிம்கள் மக்களை மதமாற்றம் செய்ய வேறு வழிகளை கையாளுகின்றனர். குறிப்பாக லடாக்கில் உள்ள பௌத்த மத பெண்களை லவ்ஜிஹாத் மூலமாக மதமாற்றம் செய்து வருகின்றனர் என ‘லடாக் பௌத்த சங்கம்’ (LBA) போன்ற அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த மாதம்கூட இதுபோல ஒரு கட்டாய மதமாற்றம் நடந்தது. இதனையடுத்து இந்த அமைப்பின் தலைவர்கள், லடாக் ஏ.டி.ஜி.பி’யான எஸ்.எஸ். கந்தாரேவை சந்தித்து இதுபோன்ற மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.