தப்ளிக் ஜமாத்தின் மீது சௌதி அரசு விதித்துள்ள தடையை வரவேற்றுள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு. அதன் மத்திய செயல் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தப்ளிக் ஜமாத் மற்றும் அதன் நிஜாமுதீன் மார்க்கஸின் அத்துமீறல்களால் பாரதம் மட்டுமல்ல, முழு உலகமும் இன்று கடுமையான சிக்கலில் உள்ளது. பாரதத்தில் தப்ளிக் ஜமாத் அமைப்பினர், தப்ளிக் ஜமாத் மற்றும் இஜ்திமா ஆகியவற்றுக்கு மத்திய அரசு முழுமையான தடை விதிக்க வேண்டும். நிஜாமுதீன் மர்கஸ் கட்டிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைக்கப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார ஆதாரங்கள் மற்றும் வளங்கள் கண்டறியப்பட்டு இணைக்கப்பட வேண்டும். இவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்கமளிக்கும் தாருல் உலூம் தியோபந்த் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஒ இந்தியா போன்ற அமைப்புகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.