பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சக்வால் நகரில் உள்ள புகழ்பெற்ற கடாஸ் ராஜ் கோயில்களுக்குச் செல்ல 112 பாரத ஹிந்து யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியுள்ளது. கடாஸ் ராஜ், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கட்டாஸ் என்ற குளத்தைச் சுற்றி இக்கோயில்களை தரிசிக்க ஹிந்து பக்தர்கள் அங்கு செல்கின்றனர். 1974ம் ஆண்டு மத வழிபாட்டுத் தலங்களுக்கான இருதரப்பு பக்தர்கள் யாத்திரை குறித்த பாரதம் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வகுத்த நெறிமுறைகளின் கீழ் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.