ராசா அகாடமி வன்முறை

மகாராஷ்டிராவில் உள்ள மூர்கமான முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான ‘ராசா அகாடமி’, அடிக்கடி வன்முறையில் ஈடுபடுவது, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது போன்றவைகளை நிகழ்த்தி வருகிறது. அவ்வகையில், சமீபத்தில் மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் உள்ள காடிபுரா பகுதியில் இளைஞர்களின் இரு குழுக்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை அடுத்து, சுமார் 300 பேர் கொண்ட ராசா அகாடமி’யை சேர்ந்த வன்முறை கும்பல், கத்தி, வாள்கள், தடிகளுடன் அங்கு வன்முறை சம்பவத்தை அரங்கேற்றினர். அங்கிருந்த மின்மாற்றியை வெடிக்கசெய்து அந்த இருட்டை பயன்படுத்தி அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் “ராசா அகாடமி ஜிந்தாபாத், காஃபிரோ கோ மாரோ” (ராசா அகாடமி வாழ்க, காஃபிர்களை தாக்குவோம்) என்று முழக்கமிட்டனர். வீடுகளை சேதப்படுத்தினர். அங்கு வந்த நாந்தேட் காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அப்பகுதில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.