கொரோனா திட்டமிட்ட கூட்டு சதியா?

லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஒரு ஆய்வு கட்டுரையில், கொரோனா வைரஸ் வுஹானில் தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க சீனவுக்கு உதவியது அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனம். அப்போது அதன் இயக்குனராக இருந்தவர் வேறு யாரும் அல்ல, தற்போது ஜோ பைடன் தலைமையிலான அரசின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் டாக்டர் அந்தோணி ஃபௌசி தான்.

இந்த ஆய்வு உயிர் ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர வேறு எந்த மருத்துவப் பயன்பாட்டுக்கும் கிடையாது. இதற்கு பயன்பட்ட பனால் 52 என்ற வௌவால் வைரசில் கொரோனா தொற்றை உண்டாக்கும் மரபணு இயற்கையாக இல்லை முதலில் அமெரிக்காவின் வட கரோலினா ஆய்வகத்தில் செய்யப்பட்ட இந்த சோதனை பிறகு சீனாவின் வுஹானுக்கு மாற்றப்பட்டது.

உலகின் பல பகுதிகளில் இருந்து வௌவால்களின் வைரஸ்களை சேகரிப்பது குறித்து அமெரிக்க அரசுடன் எகோ ஹெல்த் அலையன்ஸ் நிறுவனம் பலமுறை விவாதித்து உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் பலமுறை ஊஹான் ஆய்வகத்தில் சீன விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சீனா இதனை தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் நிதியுதவியை நிராகரித்த்து. ஊஹான் விலங்கு சந்தையில் இருந்து இது பரவியது, ஆய்வகத்தில்  இருந்து தவறுதலாக இந்த வைரஸ் பரவிவிட்டது போன்ற எந்த கூற்றுக்கும் போதிய ஆதாரம் இல்லை என பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.