போராட்டமே தொழிலா?

மூன்று விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதனால், விவசாய போராட்டம் என்ற பெயரில் கமிஷன் ஏஜெண்டுகளையும் அவர்களது கூலி ஆட்களையும் வைத்து இது நாள் வரை போராட்டங்கள் நடத்திவந்த அந்த கும்பலின் தலைவர் ராகேஷ் திகாயத்துக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்றாகிவிட்டது.

இதனால் அவர்கள் தற்போது கையில் எடுத்துள்ள பிரச்சனை, வங்கிகளை தனியார்  மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல். வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

காங்கிரஸ் கட்சி, காலிஸ்தான் பயங்கரவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், திராவிட கும்பல், முஸ்லிம் அமைப்புகள், மிஷனரிகள், வெளிநாட்டு பண உதவி என பலரின் ஆதரவு, நிதி வசதிகளுடன் இதுவரை போராட்டம் நடத்திவந்த இந்த கும்பலுக்கு போராட்டம் என்பதே நல்ல வருமான கொடுக்கும் ஒரு முழுநேர தொழிலாக மாறிவிட்டது. அதனைவிட அவர்களுக்கு மனமில்லை.

மேலும், இப்படி தொடர் போராட்டங்கள் நடத்தி உள்நாட்டிலும் உலக அளவிலும் ஆளும் கட்சியின் பெயரையும் தேசத்தின் பெயரையும் கெடுப்பது, உள்நாட்டு குழப்பம் விளைவிப்பது, நீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளை அரசு தாக்குகிறது, கொல்கிறது என அதனை அப்படியே திசைமாற்றுவது, இந்த பிரச்சனையை வளர்த்து உள்நாட்டு பதற்றம், போர் சூழலை உண்டாக்குவது, நாட்டை ஏழ்மை நிலைக்குத் தள்ளி துண்டாடுவது போன்றவை இவர்களின் பின்னணியில் உள்ளவர்களின் நீண்டகால திட்டம்.

மதிமுகன்