பாரதத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பாரம்பரிய கோயில்கள், கோட்டைகள், உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்களை இயக்க, ‘பாரத் கௌரவ்’ திட்டம் துவங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு ரயில் பராமரிப்பு, நிறுத்துமிடம் போன்ற வசதிகளை ரயில்வே அளிக்கும். ரயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணி. பயணியர் கட்டணங்களை ஒப்பந்த நிறுவனமே முடிவு செய்யும். எனினும், அசாதாரண கட்டணம் வசூலிக்காமல் ரயில்வே கண்காணிக்கும். தற்போது இந்த ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ் சுற்றுலா ரயில் இயக்க தனியார் நிறுவனம் ஒன்று, தெற்கு ரயில்வேயில் விண்ணப்பித்தது. அந்த நிறுவனத்திற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பாரத் கௌரவ் திட்டத்தை முதலில் பெற்ற மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.