மெர்மெய்ட் பிராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் சார்பில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தின் அருகில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோயிலின் 0.31 சென்ட் நிலத்தை சாலை அமைக்க, வாடகைக்கு பதிலாக 3 வருட குத்தகைக்குத்தர ஆணையிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ‘கோயில் நிலத்தில் ஒரு அங்குல இடத்தைக்கூட குத்தகைக்குத் தரத் தேவையில்லை; மனுதாரரின் நிலத்தில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த சாலை நிரந்தரமாகிவிடும் என கோயில் தரப்பில் கூறப்பட்டது. கோயில் சொத்துக்களை பாதுகாக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது நலன், தனிநபர் நலன், பொருளாதார நலன், தொழில் வளர்ச்சி என எந்த காரணத்துக்காகவும் கோயில் நிலத்தை எடுக்க முடியாது. ஹிந்து அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை அமல்படுத்தத் தேவையில்லை. கோயில் சொத்துக்களை எடுக்கும் முடிவில் அரசு நிதானமாக செயல்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றம் முக்கியமானதுதான். அதற்காக கடவுளின் சொத்துக்களை விலைக்கு கொடுக்க முடியாது’ என உத்தரவிட்டது.