உத்தர பிரதேசத்தை குண்டர்கள் மற்றும் மாஃபியா ஆட்சியில் இருந்து விடுவித்து, அதன் கௌரவத்தை மீட்டெடுத்ததற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். முன்பு, உத்தர பிரதேசத்தில், சர்க்கரை ஆலைகளை மூடி, அவற்றை குறைந்த விலையில் விற்க சதி நடந்தது. இப்போது ஒரு ஆலை கூட விற்கப்படுவதில்லை. ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பது 69 சதவீதம் குறைந்துள்ளது. கொலைகள் 30 சதவீதம் குறைந்துவிட்டது. வரதட்சணை இறப்புகள் 22.5 சதவீதம் குறைந்துள்ளது. முன்பு பாதுகாப்பு இல்லாததால், மக்கள் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை வேறு மாநிலங்களுக்கு படிக்க அனுப்பினர். இன்று அப்படியில்லை, அவர்களுடன் தவறாக நடந்து கொள்ள யாரும் துணிவதில்லை. முன்பு, டெல்லியில் இருந்து சஹரன்பூரை அடைய 8 மணி நேரம் ஆகும். இப்போது 3 மணி நேரமே ஆகிறது. சாலையின் தூரமும் குறைந்துள்ளது, பிரதமர் மோடியால் இதயத்தின் தூரமும் குறைந்துவிட்டது. பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பாரதத்திற்கு மரியாதை தேடித் தந்துள்ளார். உத்திர பிரதேசத்தை ஊழலில் இருந்து வெளியே கொண்டு வந்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வரும் பணியை யோகி செய்துள்ளார்’ என கூறினார்.