தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் ஏராளமான ஹிந்து கோயில்கள் சட்டத்தை காரணம்காட்டி இடித்துத் தள்ளியது. அந்த வரிசையில் சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கனக காளீஸ்வரர் கோயிலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தமிழக அரசால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த கோயிலில் பிரதோஷ பூஜை விஷேஷமாக நடைபெறும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து வழிபடுவார்கள். இந்நிலையில், கோயில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் சிவனடியார்கள் ஒன்றிணைந்து பிரதோஷ பூஜை செய்து சிவவழிபாடு செய்தனர்.