வளர்ச்சித் திட்டம் துவக்கம்

ஒரு காலத்தில் தொலைதூரமாக கருதப்பட்ட பகுதிகளில் ஒன்றான உத்தராகண்டின் டேராடூன் பகுதிகளில் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக, அங்கு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். லக்ஷ்மண் ஜூலா கண்ணாடி பாலம், டெல்லி டேராடூன் பொருளாதார வழித்தடம், ஹரித்வார் ரிங்ரோடு திட்டம், டேராடூன் பௌண்டா சாஹிப் சாலை திட்டம், நிலச்சரிவு  அபாயம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.