முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் அடாவடி

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் படித்த டேனிஷ் ரஹீம், ஐந்தாண்டுகள் கஷ்டப்பட்டு படித்து ஆய்வு செய்து கடந்த 2020ம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். கடந்த ஆண்டு அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒரு செய்தி சேனலில் இதனை பகிரங்கமாக பாராட்டி பேசினார் ரஹீம். இதனையடுத்து, அக்கல்லூரியின் மொழியியல் துறைத் தலைவர் அவரை அழைத்து, இது எங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது. பொது இடங்களில் பிரதமரைப் புகழ்ந்து பேச வேண்டாம் என்று எச்சரித்தார். அவர் பெற்ற பட்டத்தை திருப்பி அளிக்குமாறு பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு என்னையும் என் படிப்பையும் காக்க வேண்டும் என டேனிஷ் ரஹீம் கோரிக்கை விடுத்தார். ரஹீமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கல்லூரி செய்தித் தொடர்பாளர் ‘இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவருக்கு எல்.ஏ.எம் பி.எச்.டி பட்டம் வழங்கப்பட வேண்டும். தவறாக, அவருக்கு மொழியியலில் பட்டம் வழங்கப்பட்டது. தவறு திருத்தப்படும். இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.