ஜி.டி.பி உயர்வு

பாரதப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் அனைத்து துறைகளிலும் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. பண்டிகை கால வர்த்தகத்தால் உற்பத்தி துறையும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக செப்டம்பர் காலாண்டில் பாரதப் பொருளாதாரம் 8.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாரதப் பொருளாதாரம் – 7 சதவீதத்தில் இருந்தது. தற்போது ஏற்பட்டு உள்ள பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து மக்களும், வர்த்தக சந்தையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் என்பதையும் தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளதால் அது வர்த்தக சந்தை வளர்ச்சிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. 2020 செப்டம்பர் காலாண்டில் 35,61,530 கோடி ரூபாயாக இருந்த பொருளாதாரம் தற்போது 35,73,451 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.