மாணவிகளை காக்கவைத்த மந்திரி

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிடுவது, கோட்டப்பாளையத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு சென்றார். அமைச்சரை வரவேற்க, கோட்டப்பாளையம் புனித லுார்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரை, பள்ளி நிர்வாகம் சாலையோரம் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தது. பல மாணவியர் செருப்புகூட இல்லாமல் காத்திருந்தனர். இதனை பார்த்த பெற்றோரும் பொதுமக்களும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தனர். தான் வருகையில் பெண் காவலர்கள் நிற்கத் தேவையில்லை என கூறினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், அது முறையாக கடைபிடிக்கப்படுவது இல்லை என்பது வேறு விஷயம். இந்நிலையில், இப்படி நடந்துகொண்ட அமைச்சரையும் அந்த பள்ளி நிர்வாகத்தையும் முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இப்படி நடக்கக்கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.