காமெடி செய்யும் காங்கிரஸ்

பிரதமரே மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு  வாபஸ் பெறும் என்று அறிவித்து அதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்தபோது, இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோஷமிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள், வெளியே வந்து விவசாய சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று நடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.  பா.ஜ.கவை எதிர்க்க உங்களுக்கு தகுதியில்லை என்று மமதா பானர்ஜி காங்கிரஸ் தலைவர்களை பார்த்து கூறியதிலும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் பிரசாந்த் கிஷோர் வரை அனைவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் முதிர்ச்சியின்றி செயல்படுகிறார் என கூறியதிலும் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. காங்கிரசை விட்டு மூத்தத் தலைவர்கள் ஏன் ஓடுகிறார்கள், அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று காங்கிரஸ் கட்சி ஏன் அதளபாதாளத்துக்கு சென்றுகொண்டுள்ளது என்பதற்கு இந்த போராட்டம் சிறந்த உதாரணம்.