அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட்டில் வெளியிடப்பட்ட பயங்கரவாத குழுக்கள் குறித்த ஆய்வாளர் ஜெசிகா டிரிஸ்கோ டார்டன் என்பவரின் ஒரு ஆய்வறிக்கையில், ’15 நாடுகளில் செயல்படும் 58 பயங்கரவாத குழுக்கள், குழந்தைகளை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துகின்றன. வன்முறைகள், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் இளைஞர்களையும் பயங்கரவாதம், தற்கொலைபடை, குண்டு வைத்தல், மனித கேடயம், வயதான பயங்கரவாதிகளை பராமரித்தல் போன்ற செயல்களுக்கு இந்த ஆயுதமேந்திய குழுக்கள் பயன்படுத்துகின்றன. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னோடியாக உள்ளது. சில இளைஞர்கள் பயங்கரவாத குழுக்களில் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக சேர்கின்றனர். பலர் மூளை சலவை செய்து ஏமாற்றப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள் அல்லது வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். இளைஞர்கள் எப்படி வன்முறை தீவிரவாத குழுக்களுக்குள் நுழைகிறார்கள் என்பது குறித்த சர்வதேச நாடுகளின் புரிதல், பயங்கரவாதத்தில் இளைஞர்களின் ஈடுபாட்டை தடுப்பதற்கு உதவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.