தலைவர் எவ்வழி அமைச்சர் அவ்வழி

திருச்சி மாவட்டம், திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. அப்போது விவசாயி ஒருவர், ‘வெள்ள பாதிப்புகளை வயலில் இறங்கி நேரடியாக பார்வையிட வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அவ்வளவுதான்,  வெள்ளை சட்டையும் பேண்டும் அழுக்காகிவிடும், அமைச்சரான தனது காலில் சேறு படலாமா என நினைத்து ஆத்திரம் அடைந்த தி.மு.க அமைச்சர் மகேஷ், அந்த விவசாயியை ‘ஏய் போய்யா’ என ஏகவசனத்தில் திட்டினார். அதைக் கேட்ட விவசாயி, ‘நானும் விவசாயி தான்’ எனக் கூற, அமைச்சர் மகேஷ், விவசாயியை பார்த்து முறைத்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வயல்வெளியில் சிமெண்ட் போட்டு நடப்பது, தார் சாலை அமைத்து நடப்பது, அலங்கார ஷாமியானா பந்தல் போட்டு வெள்ள நிலவரத்தை பார்வையிடுவது, வீட்டு வாசலில் கயிறு கட்டி மக்களை தன்னை நோக்கி வரவிடாமல் பார்த்துக்கொள்வது என தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் செயல்படும்போது அவரின் அமைச்சரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?