மணிஷ் திவாரி கேள்வி

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி எழுதியுள்ள ’10 பிளாஷ் பாயின்ட்ஸ்; 20 இயர்ஸ் நேஷனல் செக்யூரிட்டி சிச்சுவேஷன்ஸ் தட் இம்பாக்டெட் இந்தியா’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். அதில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2008ல் மும்பையில் நடத்திய தாக்குதல் நடைபெற்றது. இதில் 160 அப்பாவி மக்கள், காவல் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அப்போதைய மத்திய அரசு சரியான பதிலடி தந்திருக்க வேண்டும். அது போன்ற நேரங்களில் அரசு அதிரடியில் இறங்குவதே பலன் அளிக்கும். அமைதி காப்பது பலம் அல்ல; பலவீனமாகவே கருதப்படும்’ என, குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து காங்கிரசில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, மணிஷ் திவாரி புத்தகத்தில் எழுதியுள்ள கருத்தில் தவறு ஏதுமில்லை. காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தேசத்தின் பாதுகாப்பு குறித்து துளியும் அக்கறையின்றி, பொறுப்பற்ற முறையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டது இதனால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தர நம் ராணுவத்தினர் அனுமதிக்கப்படாதது ஏன் என்பது குறித்து சோனியாவும் ராகுலும் பதில் அளிப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.