தி.மு.க அராஜகங்கள்

தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சி உடன் பிறப்புகளின் அடிதடி, ரௌடியிசம், கட்டப்பஞ்சாயத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஒரு சில நாட்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளில் ஒரு சில உங்கள் பார்வைக்கு:

கையை வெட்டிய தி.மு.க ரௌடிகள்:

மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது ஒரு அரசு பேருந்து. பாதை குறுகலானது என்பதால் ஓட்டுநர் மெதுவாக பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது வேகமாக சொகுசு காரில் வந்த தி.மு.கவினர் பேருந்தை முந்திச் செல்ல முயன்றனர். ஹாரன் அடித்தும் வழிவிடாததால் ஓட்டுநரை தரக்குறைவாக பேசினர். ஒரு கட்டத்தில் பேருந்தை ஓவர்டேக் செய்து நிறுத்தி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்தனர். ஓட்டுநரின் கையையும் வெட்டிச்சென்றுவிட்டனர்.

நில அபகரிப்பில் தி.மு.க எம்.பி:

ராஜபாளையத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்பவருக்கு சொந்தமாக உள்ள 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.5 ஏக்கர் நிலத்தை தென்காசி தொகுதி தி.மு.க எம்.பியான தனுஷ்.எம்.குமார் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதித்தர கொலை மிரட்டல் விடுக்கிறார். கணேஷ் பார்த்து வந்த நீர்தேக்க அணை காவலாளி பணியையும் சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார் என விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறிய கணேஷ், அவரின் வாகனம் முன்பு மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மருத்துவரை கடத்திய ஊராட்சித் தலைவர்:

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பல் மருத்துவராக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன் அவரை மூன்று பேர் ஒரு காரில் கடத்திச் சென்று ஓட்டப்பிடாரத்தில் ஒரு தோட்டத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மீண்டும் அழைத்துவந்து இறக்கிவிட்டு ‘ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும். இதனை யாரிடமாவது சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கூண்டோடு அழித்துவிடுவோம்’ என்று மிரட்டிச் சென்றுள்ளனர். விசாரணையில், இதில் ஈடுபட்டது ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலருமான இளையராஜா என தெரியவந்தது.

ஊடகங்களை திட்டிய அமைச்சர்:

கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் பேட்டிக்காக தங்களின் மைக்குகளை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் நீட்டினார்கள். அது தெரியாமல் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மேல் பட்டுவிட கோபத்தில் அவர், ‘யோவ் கீழே உட்காரு.. சொல்றோம்ல உக்காரு.. மைக்கு வெளில போயிரு’ என கையை நீட்டி செய்தியாளர்களை ஒருமையில் மிரட்டினார்.

இச்சம்பவங்கள் அனைத்தும் தி.மு.க துவக்கம் குறித்து ஈ.வே ராமசாமி நாயக்கர் கூறிய கருத்துகள் இன்றளவும் மிகச்சரியாக பொருந்துகின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறது.